தமிழக அரசின் நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், மதிப்பீட்டு தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.Naan Mudhalvan Rs.7500 Incentive Scheme
நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நான் முதல்வன் திட்டம் :
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
தற்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டு தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு :
அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 07.03.2023 அன்று இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு அரசின் 2023-2024 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,
அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும்,
ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் மாணவர்களுக்கு தேவையான இதர வசதிகளைச் செய்து தரும் வகையில் திட்டமானது செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. tn government Naan Mudhalvan Scheme online apply
மாதம் ரூ.7,500 வழங்கப்படும் :
இந்த திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தமிழக மாணவர்கள் 1000 பேருக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
மதிப்பீட்டு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ( https://www.naanmudhalvan.tn.gov.in ) விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 17ம் தேதி ஆகும்.
2024 ஜூலை மாதத்தில்1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் – 10.3 சதவீதம் வரை அதிகரிப்பு !
இதனை தொடர்ந்து மதிப்பீட்டு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்வானது செப்டம்பர் 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.
கூடுதல் விவரங்களைதெரிந்துகொள்ள மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.