ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து - தமிழ்நாடு அரசு உத்தரவுஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையப்பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 1807 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும், 460 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர் ஒருவர் என்ற வீதம் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பல பலர் பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் தேர்வு நடத்தி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வை எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 25 ஆயிரம் மருத்துவர்கள் எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்களில் 1,021 மருத்துவர்கள் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

அந்த வகையில் தேர்வானவர்களில் பலர் பணியாற்ற விருப்பமில்லாமல் பணியில் சேரவில்லை. சுமார் 193 பேர் பணி ஆணை பெற்றும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையங்களில் பணியில் சேரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்களின் பணி ஆணையை பொது சுகாதாரத் துறை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களை அப்பணியிடங்களில் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *