தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை:
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் போன்றவை அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த துறை சார்ந்த தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும். அந்த வகையில் அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்.
சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!
அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட வேண்டும்:
பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அத்துடன் அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.