இந்த வருடம் (2024) திருக்குறள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ15000 ரொக்கப் பரிசாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு:
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோளாகும். அந்த வகையில் மாணவர்களின் மூலம் தாய் மொழி தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ரூ.15,000 பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கும் திட்டம் நடைபெற உள்ளது .
எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர் வருகிற அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திருக்குறள் போட்டி 2024 மாணவர்களுக்கு ரூ15000
அதில் கூறியிருப்பதாவது, ” தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் இந்த திட்டத்தின் மூலம் 1330 திருக்குறளை கூறும் மாணவர்களுக்கு பரிசு தொகையை வழங்கி வருகிறது. எனவே இதில் கலந்து கொள்பவர்கள் இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவைகளை தெரிவித்தால் கூட அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் படைத்தரவாக இருக்க வேண்டும்.
Also Read: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் ஆசிரியர் – கோவையை புரட்டி போட்ட சம்பவம்!
அதுமட்டுமின்றி திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள் மற்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளிட்டவைகளை அறிந்திருக்க வேண்டும். எனவே போட்டியாளர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் https://tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்
தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு
பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்