தமிழகத்தில் வருகிற 2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியது. இதனால் அரசு நிவாரண நிதியை வழங்கி வருகிறது.
2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு – யாருக்கெல்லாம் தெரியுமா?
இதனை தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் தங்கள் சொந்த பந்தங்களுடன் கூடி ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை? திருமாவளவன் அதிரடி முடிவு!
அதேபோல் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம், மகளிர் உரிமை தொகையான ரூ.1000 பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ஜனவரி 10ம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மகளிர் உரிமை தொகை ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 இரண்டையும் சேர்த்து 2000 ரூபாய் கிடைக்கும். இதனால், பொதுமக்கள் தற்போதே மகிழ்ச்சியில் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்