தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

தற்போது தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அரபிக் கடலில் உருவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்றும், அத்துடன் தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து – முழு தகவல் இதோ !

அந்த வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், tn government Warning heavy rain precautionary measures – Order to District Collectors

மேலும் மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் இணைந்து பயணியாற்ற வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *