ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், தொடர்ந்து சில இடங்களில் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது – மீறினால் 10 ரூபாய் அபராதம்!
குறிப்பாக உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தான் மக்களுக்கு பார்சல் கொடுக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தான் அரசு தடை விதித்திருந்தது.
மேலும் ரோட்டோரம் இருக்கும் கையேந்தி பவன் உள்ளிட்ட ஹோட்டல்களில், உணவை பார்சல் செய்ய பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் தரமற்ற, சில்வர் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு கேன்சர் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தேநீர் கடைகளிலும் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் அனுமதி பெற தடையின்மை சான்று பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!
இந்நிலையில், பிரியாணியை சில்வர் கவரில் பார்சல் செய்து அதன் கலர் உருகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. எனவே இனிமேல் ஹோட்டல்களில், சில்வர் கவரில் பார்சல் செய்து வந்தால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்
தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி
2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை
அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்