செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் வார இறுதி நாட்களை தவிர்த்து ஏதேனும் விசேஷ நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இம்மாதம் செப்டம்பர் 16ஆம் தேதி திங்கள் அன்று மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூரில் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செப் 17ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் நேற்று தமிழக அரசின் தலைமை ஹாஜி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29 ஆம் தேதி புதன், அதாவது ஆங்கில மாதத்தில் 04.09.2024 அன்று மாலை ரபீஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் தென்படவில்லை.
மேலும் நாளை செப் 6ம் தேதி வெள்ளி அன்று ரபீஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. மிலாது நபி செப் 17ம் தேதி செவ்வாய் அன்று கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப் 16 விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் விடுமுறை தள்ளி போவதாக இருக்கிறது.
Also Read: பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் – அரசு கொண்டு வந்த சூப்பரான திட்டம் – எப்படி பெறுவது?
எனவே தலைமை ஹாஜி அறிவிப்பின்படி ஒரு நாள் தள்ளி விடுமுறை அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் அதிலும் 10 நாட்கள் விடுமுறை வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை