ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை: தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. அப்படி அங்கு என்ன ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்கலாம். ராமாயணம் கதைகளில் இராமநாதபுரம் மாவட்டத்தை ஒரு சில முக்கிய சுற்றுலா தலங்கள் இடம் பெற்றுள்ளது.
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
அதுமட்டுமின்றி நம் நாட்டுக்காக உழைத்த மண்ணின் மைந்தன் மறைந்த முனைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு மண்டபம் அங்கு தான் உள்ளது. அது போக பாம்பன் பாலம், தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை மற்றும் ஏர்வாடி சுற்றுலா தளமாக உள்ளது.
இதனால் இங்கு மற்ற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தினசரி வந்து செல்கின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் செல்ல இவர்களுக்கென்று தனி கப்பல் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், தற்போது தமிழக அரசு கப்பல் சேவையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read: ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொன்ன கூகுள்!
அதிகபட்சம் 50 பேர் பயணம் செய்யும் வகையில் 3 மணி நேரத்துக்கு மிகாமல் சுற்றுலா பயணிகள் கப்பலை இயக்க திட்டமிட்டுள்ளது. எனவே கப்பலை இயக்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் வருகிற அக்டோபர் 7ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கடல்சார் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை