ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 24,610 முழு நேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகிறது. இதன் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் மேலும் ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ரேஷன் கடைகளில் இனி சேமிப்பு கணக்கு
அதாவது ரேஷன் கடைகள் இனிமேல் வங்கி போல் மாற உள்ளதாகவும், ரேஷன் கடைகள் மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ” கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர் சராசரி வயது, 53 ஆக இருக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக நடத்தி வரும் நியாய விலை கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் மக்களுக்கு, பல்வேறு துறைகளின் மூலமாக கிடைக்கும் நலத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
தீபாவளி முன்னிட்டு ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் – கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!
எனவே இதன் வாயிலாக, சேமிப்பு மற்றும் கடன் சேவை மக்களை சென்றடையும் வகையில், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தொடர்ந்து, ரேஷன் ஊழியர்கள் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் மக்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதன்படி சேமிப்பு கணக்குகளுக்கு, கடை ஊழியர்களுக்கு தலா ஒரு கணக்குக்கு, ரூ. 5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்