தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி: தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதுவீடு வாங்க 4 லட்சம் நிதிஉதவி
அதாவது, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக தான் அரசு நிதி உதவியை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த கூட்டத்தில் இந்த திட்டம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு அரசு சார்பாக 4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
இராக்கில் பெண்கள் திருமண வயது 9 ஆக குறைப்பு – நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு!
இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை மாவட்ட வாரியாக கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?