தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு என தோட்டக்கலைத் துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கொடைக்கானல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைதுறையின் கட்டுப்பாட்டில் மூன்று பூங்காக்கள் உள்ளன.
கொடைக்கானல் ஏரிக்கு அருகே உள்ள பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு அருகே உள்ள செட்டியார் பூங்கா, கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில்அமைந்துள்ள ரோஜா பூங்கா,
தற்போது இந்த மூன்று பூங்காக்களும் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம் உயர்வு :
இந்நிலையில் வழக்கமான நாட்களில் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா ஆகியவற்றிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் இன்றிலிருந்து புதிய கட்டண நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரோஜா பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்கா செல்ல நுழைவு கட்டணம் :
அந்த வகையில் ரோஜா பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்கா செல்ல நுழைவு கட்டணமாக இருந்து வந்த 30 ரூபாய் கட்டணம் தற்போது 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் சிறியவர்களுக்கு 15 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 25 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கு 25 ரூபாய் நுழைவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரோஜா பூங்காவில் இதுவரை இலவச வாகன நிறுத்தமாக இருந்த நிலையில் தற்போது இருசக்கர வாகனத்திற்கு 50 ரூபாயும், கார்களுக்கு 100 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் :
இதனையடுத்து செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக முன்னர் 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இருபது ரூபாய் சேர்க்கப்பட்டு 40 ரூபாயாக இன்றிலிருந்து வசூல் செய்யப்பட உள்ளது.
மேலும் சிறியவர்களுக்கு 15 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம் தற்போது ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 20 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவு தேர்வு ரத்து – துணை வேந்தர் அறிவிப்பு !
இதனை தொடர்ந்து செட்டியார் பூங்காவிற்கு நுழைவு மாணவர்களுக்கு கட்டணமாக இருபது ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய நுழைவு கட்டணமானது இன்றிலிருந்து வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திடீரென முன்னறிவிப்பு ஏதும் இன்றி உயர்த்தப்பட்ட கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.