தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருது அறிவிக்கப்பட்டதிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா விருது அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மக்களை தேடி மருத்துவம் திட்டம் :
தமிழ்நாடு அரசு சார்பில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் போன்ற நோயாளிகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற பயனுள்ள திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.
மேலும் தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா சபை விருது அறிவிப்பு :
இதனை தொடர்ந்து இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்திற்கான 2024ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு – முழு தகவல் இதோ !
அந்த வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான united nation interagency task போர்ஸ் விருது அறிவிக்கப்பட்டதிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.