வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் உயிரிழப்பு: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக பதவி வகித்தவர் வெள்ளையன். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சமீபத்தில் சென்னையில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம் ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் நேற்று வரை அவருக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. President of the Chamber of Commerce
Also Read: தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!
அதாவது நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்