இன்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பட்டத்தை வென்றார் குகேஷ், அவருக்கு ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கிராண்ட் மாஸ்டர் குகேஷ்:
சிங்கப்பூரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. மொத்தம் இந்த போட்டியில் 14 சுற்றுகள் உள்ளது. இதில் நடந்த 13 சுற்றுகளில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற எல்லா சுற்றுகளும் டிராவில் முடிந்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024: குகேஷ் அபார வெற்றி – ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை – குவியும் வாழ்த்துக்கள்!
இப்படி இருக்கையில் 14வது சுற்று தான் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றியாளரை நிர்ணயிக்க இருந்தது. அந்த வகையில் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி வந்தார். மேலும், போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் இருந்து, இருவரும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் இந்த போட்டியும் ட்ராவில் முடியுமா என்று எதிர்பார்த்தனர்.
IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி: மழையால் தடைபடுமா? வெளியான வானிலை அறிக்கை!
இந்நிலையில், 58-வது நகர்த்தலில் ட்ங் லீரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன் ஆனார். 18 வயதிலேயே உலக செஸ் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளார். மேலும் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, குகேஷ்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முழு விவரம் இதோ !
டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!
தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!