தற்போது கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் கேரளாவில் ATM கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் நாமக்கல் வழியாக கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம் கொள்ளையர்கள் தற்போது பிடிபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை தீவிர விசாரணை
கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கேரளாவில் ATM கொள்ளை :
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம் கொள்ளையர்கள் தற்போது பிடிபட்டுள்ளனர். Cash trapped in container truck incident
இதனையடுத்து கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி லாரி நிற்காமல் சென்றதாக தகவல் வெளியானது.
இதன் காரணமாக போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அதே சமயம் லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் :
இந்நிலையில் கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளைக்கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி ATM கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்,
மேலும் ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து – உள்ளே சிக்கிய 52 உயிர்கள் – என்ன நடந்தது?
அத்துடன் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி நாமக்கல் எஸ்.பி. ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.