போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க - வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க - வாகன ஓட்டிகளுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் !

தற்போது சென்னையில் கூகுள் மேப்பில் போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த,

இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது.

இதனைதொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், அதனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது.

அத்துடன் சமீப காலமாக சென்னை மாநகரத்தில் அதிகரித்து வரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த ,

சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரால் நடத்தப்படும் சோதனையில், விதிகளை மீறுபவர்களுக்கு மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டாலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து கொண்டு போலீசாரை கண்டதும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.

இப்படியான இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரி அருகே உள்ள பகுதி ஒன்றில் ‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இதன் பதிவானது வைரல் ஆனது.

இதனையடுத்து சென்னையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’ என்ற குறிப்பு கூகுள் மேப்ஸ்-இல் இடம்பெற்றால், பலரும் ஹெல்மெட் அணிய தொடங்குவார்கள்.

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து – கூடுதலாக பேருந்துகள் இயக்க திட்டம் !

இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய முயற்சியை சென்னை முழுவதும் கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *