ரேஷன் கார்டில் KYC அப்டேட் கடைசி நாள்: தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் கடைசி நாள்
மேலும் அரசு சார்பாக வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் சரியான மக்களுக்கு சென்றடையவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து அரசு சார்பாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில், ஒரு சிலர் பல பெயர்களில் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதும், கள்ள சந்தையில் உணவுகளை விற்பதும் தெரிய வந்தது.
மேலும் அரசு ஊழியர்களும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு பொருட்களை பெற்று வருவதும் தெரிய வந்தது. இந்நிலையில் போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிய ரேஷன் கார்டில் Know Your Customer (KYC)-ஐ மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
மேலும் இதன் மூலம் ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது ரேஷன் கடைகளில் நேரடியாக சமர்பிக்கலாம். மேலும் டிசம்பர் 1ஆம் தேதி வரை கேஒய்சி அப்டேட் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தான் கால அவகாசம் தேதியின் கடைசி நாள் அதன்பிறகு ரேஷன் கார்டு கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு