தமிழக அரசின் பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024. பத்திர பதிவு துறையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்திற்கு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பு (Guide Value) புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இந்த புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது.
பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024
ஆவண பதிவுகள்:
தமிழ்நாடு அரசின் பத்திர பதிவு துறையில் இதுவரை கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் 1 ந் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பு தான் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படியில் தான் பொதுமக்களிடம் இருந்து ஆவண பதிவுக்கான முத்திரை கட்டணம் & பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. பின்னர் அதில் உள்ள குறைகளை ஆராய்ந்து சீர் செய்தனர். ஆனால் புதிதாக மதிப்பு ஏதும் நிர்ணயம் செய்யப்பட வில்லை.
ஒப்புதல்:
பின்னர் கடந்த மாதம் ஜூன் 10 ந் தேதி அன்று புதிதாக திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து வந்த ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை வைத்து பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திர பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29 ந் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்த வரை கிராமப்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10% அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்
புதிய வழிகாட்டி மதிப்பு:
திருத்தம் செய்யப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் (ஜூலை 1) முதல் நடைமுறை படுத்த பத்திர பதிவு துறை முடிவு செய்துள்ளது. இந்த புதிய மதிப்புகள் நேற்று இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன் காரணமாக நேற்று http://tnreginet.gov.in என்ற இணையத்தளம் நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று முதல் பத்திர பதிவு செய்பவர்கள் இந்த புதிய மதிப்பின் அடிப்படையில் தான் பத்திர பதிவு செய்ய முடியும்.
ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தால், பாக்கி தொகை திருப்பி அளிக்கப்படும்.
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம் – RCB நிர்வாகம்
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு – வெளியான புதிய விலை பட்டியல்
தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு – முக்கிய சிறப்பு அம்சங்கள்
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை – இந்திய வானிலை மையம்