தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘அகல்விளக்கு’ திட்டம் அறிமுகம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அகல்விளக்கு திட்டம் :
தமிழக சட்டப்பேரவையில் தற்போது கடந்த நான்கு நாட்களாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்க அகல்விளக்கு என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர்களுக்கு வழிகாட்ட ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுக்களுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்ச்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
சென்னையில் ரூ.36 கோடி செலவில் நிரந்தர பேரிடர் நிவாரண மையம் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு !
இதனை தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் போன்றவை கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.