
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வெப்ப அலையின் தாக்கம் சற்று குறைந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு :
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்ப அலையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.
ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு :
இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் தற்போது தொடங்கியுள்ள கோடை வெயிலின் தாக்கதிலிருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜூன் மாதம் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில்,
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து !
தற்போது வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.