தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு - இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு - இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடியே 32 லட்சம் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 23 லட்சம் மக்கள் விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி வருகிறார்கள். பாக்கி இருப்பவர்கள் குடியிருப்பு, வணிகம் தொழிற்சாலை இணைப்புகள் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் மின்சார கட்டணம் அதிகரித்து அறிவிப்பு வெளியான நிலையில், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் இந்த மின் கட்டணத்தை மக்கள் மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்றோ அல்லது  ஆன்லைன் மூலமாகவோ செலுத்தி வருகின்றனர். இந்த மின் கட்டணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு

அதன்படி ஆன்லைன் மூலம் பெரும்பாலான மக்கள் தங்கள் மின் கட்டணத்தை செலுத்தி வரும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் ரூ 50,217 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மின் பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் என 60,505 கோடி வசூல் செய்துள்ளது மின்சார வாரியம். இதனை தொடர்ந்து சமீபத்தில் மத்திய அரசு 20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. tamilnadu eb

Also Read: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: இந்த சம்பவத்தை செஞ்சது 8 பேரு? பிரபல ஜோசியர் கணிப்பு!

இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இனிமேல் ரூ.5000 க்கு அதிகமாக இருக்கும் மின் கட்டணத்தை  ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

83% உள்ள ஆன்லைன் பரிவர்த்தனையை 100 சதவீதம் உயர்த்தும் முயற்சியாக,தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. tn tangedco

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *