தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு - எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு - எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு: மாமன்னர் பூலித்தேவனின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பூலித்தேவரின் 309 வது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசியில் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்ட பிரிவு 163 (1)-ன் படி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

மேலும் நாளை முதல் தென்காசியில் 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு தடையை மீறி வெளியே கூட்டமாக சுற்றி திரிந்தால் கைது செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். tenkasi district

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *