சற்று முன் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சோமவார குளம் மேல் பகுதியில் 2 வது நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 3 வது மற்றும் 4 வது இடத்தில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திருவண்ணாமலை நிலச்சரிவு :
தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் (தீபமலை) சுற்றி 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் தற்போது வசித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதக்கது.
மீட்புப்பணி :
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 4.45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மிகப்பெரிய சத்தத்துடன் பாறை ஒன்று சரிந்த நிலையில் 3 வீடுகள் மூடப்பட்டன. மேலும் அதில் 1 வீடு முழுமையாக மூடப்பட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு, அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
மீண்டும் நிலச்சரிவு :
இந்நிலையில் அண்ணாமலையார் மலையில் தற்போது 4 வது இடத்தில மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று சோமவார குளம் மேல் பகுதியில் 2 வது நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 3 வது மற்றும் 4 வது இடத்தில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
கன்னியாகுமரியில் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு – மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்!
தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.12.2024)! TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
Infosys-க்கு 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!