ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் - அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் - அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !

தற்போது சென்னையில் பயணிகளின் வசதிக்காக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் திட்டத்தினை சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் செய்யும் முறையை தற்போது சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதக்கது.

இந்த திட்டத்தின் மூலம் சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து, புறநகர் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் போன்றவற்றை தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பணிக்கு செய்பவர்கள் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்ல இந்த மூன்று வகையான போக்கு வரத்தை பயன்படுத்துவதால் அவர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்கும் நிலையில் உள்ளது.

இதனையடுத்து இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்தை கலையுமாறு அரசாங்கத்திற்கு மக்கள் புகாரளித்தனர்.

இதனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து, புறநகர் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் ஒரே டிக்கெட்டில் சென்னை முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து, புறநகர் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் இந்த சேவையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

இதனை தொடர்ந்து இந்த சேவையானது மின்சார ரயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணதிற்காக புதிய செயலியை உருவாக்கும் பணிக்காக தனியார் நிறுவனத்திற்கு தற்போது பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *