தமிழ்நாடு அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஊதியம் உயர்த்தப்பட்டதிற்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அரசுவிரைவு பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் :
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூரத்துக்கு செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.535 மட்டுமே வழங்கப்பட்டது. இதனையடுத்து இது குறைந்தபட்ச கூலி சட்ட விதி மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஒப்பந்த விதிகள் போன்றவற்றிற்கு முரணாக உள்ளதாக கூறி இதற்க்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு :
அந்த வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
இதனையடுத்து நாளொன்றுக்கு டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.535 ஆக இருந்த நிலையில் ஊதியம் உயர்த்தப்பட்டதிற்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.