Home » செய்திகள் » போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறை !

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறை !

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் - குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறை !

நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (27/08/2024 ) மாநிலம் முழுவதும் 9 மையங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். Transport department pensioners road blockade protest

இந்நிலையில் சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்ற காரணத்தால் திடீரென சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயண திட்டம் – முழு தகவல் இதோ !

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த கைது நடவடிக்கையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top