பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கைபாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் புகார் உட்பட பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்ததுடன் அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

இதற்க்கு முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் எனத் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் எழுந்து நின்றபடி தங்களது கண்டனங்களைத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து தடுப்பணைக் கட்டும் செயலை ஆந்திர அரசு கைவிட வேண்டும் எனவும் இதற்குத் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விவசாய குறைதீர்வு கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் இதனை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை – மதுவிலக்கு திருத்தம் தமிழக அரசு அறிவிப்பு!

மேலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டப்படும் எனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *