TN43 வாகனங்களுக்கு ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 07.05.2024 தேதி முதல் நீலகிரி வரும் வாகனங்கள் அனைத்தும் இ- பாஸ் பெற்றே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை என்று வட்டார போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN43 வாகனங்களுக்கு ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீலகிரி மாவட்ட பதிவு எண் TN43 பெற்றிருந்தால் இ- பாஸ் தேவையில்லை :
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் ! புண்ணிய தலங்களுக்கு சென்று வர இந்தியன் இரயில்வே சிறப்பு ஏற்பாடு – ஒரு நபருக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவு சான்று, காப்புச்சான்று, மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் உதகை வட்டார போக்குவரத்து கழகத்தை அணுகினால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உதகை வட்டார போக்குவரத்து கழகத்தால் இ- பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.