தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024. தமிழகத்தில் மே 6 ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் அரசு சட்ட கல்லூரிகள் உட்பட 23 சட்ட கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் :
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பாடு 14 அரசு சட்ட கல்லூரிகள் மற்றும் 8 தனியார் சட்ட கல்லூரிகளில் LLB ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பாடப்பிரிவுகளில் 2043 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
சட்ட பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் சீர்மிகு சட்டப்பள்ளி சார்பில் LLB HONS படிப்பில் 624 மாணவர்கள் சேர்க்கப்டுள்ளனர். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐந்தாண்டு சட்டபடிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவை சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நேற்று தொடங்கி வைத்தார்.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இணையத்தளம் :
சட்ட பல்கலைக்கழத்தில் www. tndalu.ac.in என்ற இணையதளத்தின் வழியாக சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Pet Dog License 2024: இனி செல்லப்பிராணிகளுக்கு வருடந்தோறும் உரிமம் கட்டாயம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை – எப்படி பெறுவது?
வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் முயற்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், மேலும் சட்ட கல்லூரியில் சேர எந்த வித வயது வரம்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.