TNPL வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடேட் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் மட்டுமே பணியில் நியமிக்கப்பட உள்ளனர். எனவே காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வோம்.
TNPL வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. உதவி மேலாளர் – கணக்குகள் ( Assistant Manager – Accounts )
2. அதிகாரி – கணக்கு ( Officer – Accounts ) பணியிடங்கள் TNPLல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்னிக்கை :
1. உதவி மேலாளர் ( கணக்குகள் ) – 2
2. அதிகாரி ( கணக்குகள் ) – 4 என மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. உதவி மேலாளர் ( கணக்குகள் ) :
அரசு அங்கீகரித்த பல்கலைக்கழத்தில் CA அல்லது CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. அதிகாரி ( கணக்குகள் ) :
CA அல்லது CMA அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ. 44,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !
அனுபவம் :
1. உதவி மேலாளர் ( கணக்குகள் ) :
நிதி அல்லது கணக்கு துறையில் குறைந்தது பத்து வருடங்களாவது பணி அனுபவம் இருக்க வேண்டும்.
2. அதிகாரி ( கணக்குகள் ) :
எட்டு வருடங்கள் நிதி மற்றும் கணக்கு துறையில் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி :
1. உதவி மேலாளர் :
1. GT பிரிவினர் – 29 முதல் 40 வரையில்
2. BC / BMC / MBC / DNC – 29 முதல் 43 வரையில்
3. SC / ST / SCA – 29 முதல் 45 வரையில்
2. அதிகாரி :
1. GT பிரிவினர் – 28 முதல் 40 வரையில்
2. BC / BMC / MBC / DNC – 28 முதல் 40 வரையில்
3. SC / ST /SCA – 28 முதல் 40 வரையில் இருப்பவர்கள் TNPL துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
1. உதவி மேலாளர் – ரூ. 1,27,651 வரையில்
2. அதிகாரி – ரூ. 1,05, 760 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
27.09.2023 முதல் 11.0.2023 வரையில் TNPL துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை :
TNPLல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
பொது மேலாளர் ,
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் ,
காகிதபுரம் ,
கரூர் – 639136 ,
தமிழ்நாடு .
விண்ணப்பக்கட்டணம் :
TNPL நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டணம் கிடையாது.
தேர்வு முறை :
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.