TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து. கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தேர்வு நடத்தப்பட்டு 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வில் TNPSC யானது இடஒதுக்கீட்டு முறையை சரியாக அமல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதிமுக ஆட்சியில் தேர்வான 18 DEO நியமனம் ரத்து :
TNPSC சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் – பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
அத்துடன் TNPSC சார்பில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதில் குளறுபடிகள் நடந்துள்ளது எனவும், 4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.