தமிழ்நாடு அரசு உதவி வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2024
TNPSC ஆட்சேர்ப்பு 2024: தமிழ்நாடு அரசு உதவி வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2024. TNPSC மூலம் குற்றவழக்கு தொடர்வு துறையில் 51 அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு வழக்கறிஞர் பதவிக்கு கல்வி தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், முழுவதும் கீழே தரப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | TNPSC |
வேலை வகை | (PP) Public Prosecutor |
அறிவிக்ணை எண் | 13/2024 |
வேலை இடம் | தமிழ்நாடு முழுவதும் |
தொடக்க தேதி | 13.09.2024 |
கடைசி தேதி | 12.10.2024 |
துறையின் பெயர் :
குற்றவழக்கு தொடர்வு துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
அமைப்பு :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
அரசு உதவி வழக்கு நடத்துநர் – 51
சம்பளம் :
தமிழ்நாடு அரசு ஊதிய நிலை 22 அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி :
பல்கலைக்கழக மானியாக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகம் / நிறுவனத்தால் வழங்கப்பட்ட இளநிலை சட்டத்தில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வழங்கறிஞர் சங்கத்தில் (Bar Council) கட்டாயம் உறுப்பினராக இருப்பதோடு குற்றவியல் நீதிமன்றங்களில் முனைப்புடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டாயம் வழக்கு நடத்தியவராக இருத்தல் வேண்டும்.
போதிய தமிழ்அறிவு உடையவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
தேர்வர்கள் 26 பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு : 36 ஆண்டுகள்
மேலும் SC / ST / முன்னாள் ராணுவத்தினர் / நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்று திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 ! 89, காலியிடம் அறிவிப்பு கல்வி தகுதி, வயது, சம்பளம் முழுவிபரம் !
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
இணைய வழி விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 13.09.2024
இணைய வழி விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.10.2024
தேர்வு நடைபெறும் நாள் :
முதல்நிலைத்தேர்வு – 14.12.2024
முதன்லைத் எழுத்துத்தேர்வு – முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இதனையடுத்து அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை – II பதவிக்கான தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
(i) முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவதற்கான முதல்நிலைத் தேர்வு
மற்றும் (ii) முதன்மைத் தேர்வு (எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு )
விண்ணப்பக்கட்டணம் :
தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறை பதிவு பிரிவில் பதிவு செய்த பின்பு தேர்விற்கான விண்ணப்பித்தினை நிரப்பத் தொடங்க வேண்டும். தேர்வர்கள் ஒரே ஒரு முறை மட்டும் ஒருமுறைப்பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைபதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
tnpsc assistant public prosecutor notification 2024
கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு
Rs.13,240 மாத சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
TNSWD Rs.40,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை