
TNPSC தேர்வு 2024: புவியியல் முக்கிய வினா-விடை: TNPSC குரூப் 1, 2 & 4 உள்ளிட்ட தேர்வுகள் தொடர்ந்து அடுத்தடுத்து வர இருக்கிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தேர்வர்கள் தொடர்ந்து தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் நடக்க இருக்கும் தேர்வில் புவியியல் முக்கிய பாடமாக உள்ளது. எனவே இதற்கு முன்னர் தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் குறித்து கீழே உள்ள தொகுப்பில் வழங்கியுள்ளோம். மேலும் அதற்கான விடைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
1. இயற்கை ரப்பர் உற்பத்தியில் முன்னணி வகிப்பது
A. தென் அமெரிக்கா
B. தென்கிழக்கு ஆசியா
C. மத்திய ஆப்பிரிக்கா
D. மத்திய தரைக்கடல் பகுதி
விடை: B. தென்கிழக்கு ஆசியா
2. இந்தியப் பகுதியில் உள்ள இரண்டு எரிமலைத் தீவுகள்?
A. கவரத்தி மற்றும் நியூ மூர்
B. பிட்ரா மற்றும் கவரத்தி
C. பாம்பன் மற்றும் பேரன்
D. நார்கொண்டம் மற்றும் பேரன்
விடை: D. நார்கொண்டம் மற்றும் பேரன்
3. மியான்மருடன் பொது எல்லையை கொண்டுள்ள இந்திய மாநிலங்கள்?
A. மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம்
B. மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம்
C. மிசோரம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா
D. அசாம், மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம்
விடை: A. மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம்
4. பூமியின் மொத்த கன அளவில் எந்த அடுக்கு முக்கிய பகுதியாக உள்ளது?
A. சியால்
B. சிமா
C. புவியின் இடைப்பகுதி (மேன்ட்டில்)
D. புவியின் கருவம்
விடை: C. புவியின் இடைப்பகுதி (மேன்ட்டில்)
5. கீழ்க்கண்ட நகரங்களில் எது கிழக்கில் அமைந்துள்ளது
A. கோஹிமா
B. ஜோர்ஹட்
C. இடாநகர்
D. திப்ருகர்
விடை: D. திப்ருகர்
6. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம்
A. சிக்கிம்
B. அருணாச்சலப்பிரதேசம்
C. கோவா
D. மேகாலயா
விடை: A. சிக்கிம்
7. மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்கு உள்ளது?
A. தமிழ்நாடு
B. ஒடிசா
C. அசாம்
D. மேற்கு வங்காளம்
விடை: B. ஒடிசா
8. என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கிறது
A. கன்னியாகுமரி – டெல்லி
B. கன்னியாகுமரி – சேலம்
C. சென்னை – திண்டுக்கல்
D. மும்பை – டெல்லி
விடை: B. கன்னியாகுமரி – சேலம்
9. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாக பொருந்தியுள்ளது
A. ஹிராகுட் – அணுமின்சக்தி
B. கேத்ரி – மாங்கனீஸ்
C. பாலகாட் – இரும்புத்தாது
D. அங்கலேஷ்வர் – எண்ணை கிணறு
விடை: D. அங்கலேஷ்வர் – எண்ணை கிணறு
10. முதன் முதலில் சணல் நெசவு ஆலை தொடங்கப்பட்ட இடம் எது?
A. பரணகூர்
B. ரிஷ்ரா
C. சிட்டகாங்
D. கொல்கத்தா
விடை: B. ரிஷ்ரா
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நேற்று ‘நோ பார்க்கிங்’, இன்று ‘சீட் பெல்ட்
தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய்
தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு
6 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்