தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் தேர்வாணையம் இருந்து வருகிறது. குறிப்பாக காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 வருஷமாக குறைவான இடங்களையே அரசு நிரப்பியுள்ளன. ஏன் சமீபத்தில நடந்த குரூப் 2A தேர்வு மூலம் 5, 860 இடமும், குரூப் 4 மூலம் 1000 பணியிடங்களும், மொத்தம் இரண்டரை ஆண்டுகளில் 60,567 பணியிடங்களை அரசு நிரப்பியுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ” வருகிற ஜூன் மாதத்திற்குள் மேலும் 10 ஆயிரம் பணியிடங்களை TNPSC தேர்வு மூலமாக நிரப்பப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 2 வருடத்திற்குள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து TNPSC குரூப் 4 வருகிற ஜூன் மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.