TNPSC குரூப்-2 மற்றும் 2ஏ: TNPSC தேர்வாணையம் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட பல தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை, கடந்த ஜூன் 20-ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மேலும் அந்த அறிவிப்பில் குரூப்-2 தேர்வில் 507 பணியிடங்கள், 2ஏ தேர்வுகளில் 1,820 இடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில் தேர்வு தேதி செப்டம்பர் 14-க்கு பதிலாக 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், 2,327ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 2030 ஆக குறைக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் வெளியான தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் – விவசாயிகளின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது!!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” தேர்வு தேதி எந்தவித மாற்றமும் இல்லை, அடுத்த மாதம் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். tnpsc group 2 and 2a exam date
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?