TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 ! மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் முன்பதிவு செய்யலாம் !TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 ! மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் முன்பதிவு செய்யலாம் !

தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024. நீங்கள் போட்டி தேர்வுக்கு உங்களை தயார்படுத்தி வருகிறீர்களா. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. முன் பதிவு கட்டாயம் உடனே முந்துங்கள்.

குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28 ந் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக நடத்தபட்டு வருகின்றன. இதற்கான சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தற்போது குரூப்-1 முதல் நிலை தேர்விற்கான இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. அவை வருகிற ஜூன் 24, 27 ந் தேதி மற்றும் ஜூலை 2, 5 ந் தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024 ! திருப்பூர் மாவட்ட DHS ல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்த தேர்வை எழுதுவதன் மூலம் நீங்கள் உங்களை சோதனை செய்துகொள்ள முடியும். தேர்வுக்கு முழுதாக தயார் ஆகிட்டோமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளாலாம். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நமது அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கிறது. அதில் சேர்ந்து பல மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளை பெற்று வருகின்றனர். எனவே தனியார் பயிற்சி மையத்தை நாடாமல் இது போன்ற மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறுங்கள்.

Join WhatsApp Group

எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2024

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மேலாளர் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *