டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசுத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு
இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. எனவே இந்த தேர்வில் தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 5.81 லட்சம் பேர் மட்டுமே எழுதினர்.
இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான எண்ணிக்கை கூடுதலாக 213 சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே இதன் மூலமாக தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.
மார்பிங் படங்களைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புது வசதி – மெட்டா நிறுவனம் அசத்தல் ஐடியா!
மேலும் இந்த தேர்வுக்கான முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மை தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு