TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - தேர்வாணையம் அறிவிப்பு!!TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - தேர்வாணையம் அறிவிப்பு!!

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: தமிழகத்தில் பல்வேறு துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை TNPSC தேர்வுகள் மூலமாக தொடர்ந்து தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. மேலும் வருடந்தோறும் நடக்கும் தேர்வுகள் குறித்து அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதில் சில மாற்றங்களையும் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A  உள்ளிட்ட தேர்வுகளுக்கு முதன்மை தேர்வு தனித்தனியாக நடைபெறும் என்றும் குரூப் 2வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு கிடையாது என்றும் தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்

அதாவது டிஎன்பிஎஸ்சி  குரூப் 2 A முதன்மை தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வரும்  குரூப் 2 முதன்மை தேர்வில் தமிழ் தகுதி தாளும், பொது அறிவும் விரிவாக விடை அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே போல் குரூப் 2 A முதன்மை தேர்விலும் மாற்றியமைக்கப்பட்டது மட்டுமின்றி பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையைத் தேர்வு செய்யும் விதமாக புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது. இந்த பொது அறிவு தாளில், 20 % வினாக்கள் 10ம் வகுப்பு தரத்திலான கணக்கு பாடமும், 30% வினாக்கள் 10ம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழிலும், 50% வினாக்கள் கல்லூரி தரத்திலான பொது அறிவு சார்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tnpsc exam news – Tnpsc group 2 and group 2a exams – tnpsc government exams

அட்ரா சக்க…, செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்.. இனி கையில் பணம் இருந்துட்டே இருக்கும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *