TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 ! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, தேர்வர்களே ரெடியா !TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 ! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, தேர்வர்களே ரெடியா !

தமிழ்நாடு அரசு சார்பில் TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024 பதவிக்கான முதல் நிலை தேர்வானது நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது ஒவ்வொரு வருடமும் போட்டி தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி கடந்த ஜூன் 20 ந் தேதி குரூப் 2 & 2A முதல்நிலை தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. முதல் நிலை போட்டி தேர்வானது வருகிற செப்டம்பர் 14 ந் தேதி நடைபெற உள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2327 ஆகும். அதில் குரூப் 2 பதவிக்கு 507 இடங்களும் மற்றும் 2A பதவிக்கு 1820 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பதவிக்கு பட்டதாரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 20 முதல் ஜூலை 19 வரை வரவேற்கப்படுகின்றன. இரு நிலைகளாக இந்த தேர்வு நடைபெறும். தற்போது முதல் நிலை தேர்விற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகி உள்ளது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக இரண்டாம் நிலை தேர்விற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

நம் தமிழக அரசானது TNPSC குரூப் 2 & 2A தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலங்களில் நடத்தப்பட இருக்கிறது. சிறந்த பயிற்றுநர்களை கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் பயிற்சி தேர்வுகள், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

இந்த தேர்விற்கான மென் பாட குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் http://tamilnaducareerservices.tn.gov.in/ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இணைய தளத்தில் பதிவு செய்து, மென்பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர வீடியோ பாட குறிப்புகள் TN Career Services Employment என்ற You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Join WhatsApp Group

கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத மாணவர்கள் தமிழக அரசின் இந்த இலவச பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்கை கொண்ட மாணவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *