Home » செய்திகள் » TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!!

TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!!

TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!!

TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே: TNPSC தேர்வாணையம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது குரூப்-2 நிலையில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

TNPSC குரூப் 2 எழுத போகும் தேர்வர்களே

மேலும் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்வில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

  • வருகிற செப் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு ஆரம்பிக்கும் எனவே காலை 9 மணிக்குள் தேர்வறைக்குள் தேர்வர்கள் இருக்க வேண்டும்.
  • காலை 9 மணிக்கு மேல் எந்த ஒரு தேர்வரும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்க படமாட்டார்.
  • மேலும் தேர்வு முழுவதுமாக முடியும் வரை தேர்வர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை.
  • தேர்வுக்கு வரும் தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட உங்கள் ஹால் டிக்கெட்டுடன் தேர்வறைக்கு வர வேண்டும்.
  • குறிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(Pan Card) , வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை  கொண்டு வர வேண்டும்.
  • ஹால் டிக்கெட்டில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உடனடியாக தேர்வாணையத்திற்கு மின்னஞ்சல் ([email protected]) மூலம் தெரிவிக்கலாம்.
  • தேர்வில் தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனை பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • குறிப்பாக போன், புத்தகங்கள் போன்றவை கொண்டு வர தடை. அந்த பொருட்களை தேர்வர்கள் கொண்டு வர வேண்டாம். மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வேறு ஏதேனும் அபராதத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. tnpsc group 2 exam guidelines

Also Read: பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் 5 ஆண்டுகள் பணியாற்ற தடை –  தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்!

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top