Home » செய்திகள் » TNPSC குரூப்-2 தேர்வர்களே..,  இனி நேர்முகத் தேர்வு கிடையாது – புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!!

TNPSC குரூப்-2 தேர்வர்களே..,  இனி நேர்முகத் தேர்வு கிடையாது – புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!!

TNPSC குரூப்-2 தேர்வர்களே..,  இனி நேர்முகத் தேர்வு கிடையாது - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!!

TNPSC குரூப்-2 புதிய தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் அரசு சார்ந்த துறையில் இருக்கும்  பல்வேறு காலி இடங்களை நிரப்ப TNPSC குரூப் 1, 2, 3, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதியும் மற்றும் குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9 ஆம் தேதியும்  நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு தேதி மாற்றம், தேர்வு திட்டம் நடைமுறை திருத்தம் குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியீட்டு செப்டம்பர் மாதத்தில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட உள்ளது.

TNPSC குரூப்-2 புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

இது தவிர தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு இருக்கிறது. குரூப் 2 பதவிகளுக்கு தற்போது வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி குரூப் 2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு கிடையாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதே போல  குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு திட்டமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவை இனி விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கும் கொள்குறி முறையில் மாற்றி அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top