TNPSC தேர்வர்களே -  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்படி பார்ப்பது தெரியுமா?TNPSC தேர்வர்களே -  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்படி பார்ப்பது தெரியுமா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2A தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வாணையம்,  அரசு காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து நிரப்பி வருகிறது. அந்த வகையில்  TNPSC Group   2-க்கான முதல் நிலை தேர்வு கடந்த 2022, மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 161 நேர்காணல் பணியிடங்களும், 5990 நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. மேலும் இந்த முதல் நிலை தேர்வில் 57, 641 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து தேர்ச்சி அடைந்தவர்களில்  55,071 பேர் மட்டும் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

அதன்படி இந்த முதன்மை தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இதன் முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில், தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான நேர்முக தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் உள்ளிட்டவைகளை வெளியிடாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த முடிவுகளையும் தேர்வாணையம்  வெளியிட்டுள்ளது. அதன்படி 5,990 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. மேலும் முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

என்னது.., ஹேர் கட்டுக்கு ஒரு லட்சமா?.., கிங் விராட் கோலியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறிய ஷாக்கிங்  தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *