TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது.., வெறும் 6244 காலி பணியிடங்களுக்காக 20 லட்சம் பேர் போட்டா போட்டி!TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது.., வெறும் 6244 காலி பணியிடங்களுக்காக 20 லட்சம் பேர் போட்டா போட்டி!

TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது: TNPSC தேர்வாணையம் அரசாங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடியே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 9) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை, அதாவது 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். எனவே தேர்வர்கள் தேர்வு ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்று விட வேண்டும். அரசு அறிவித்தபடி 6,244 காலியிடங்கள் தான் தற்போது நிரப்பப்பட இருக்கிறது.

ஆனால் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்த வேலைக்காக போட்டி போடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முடிவுகள் அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் வெளியாகும் என்று தேர்வாணையம் முன்னரே தெரிவித்திருந்தது. மேலும் குரூப் 4 தேர்வுக்கு நேர்முக தேர்வு இல்லை என்ற நிலையில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டாயம் அரசாங்க வேலை உண்டு என்று கூறப்படுகிறது. எனவே நாளை தேர்வு எழுதப்போகும் தேர்வர்கள் கவனமாக எழுதி தேர்ச்சி பெற்று அரசாங்க வேலையை கையில் வாங்குங்கள் என்று “SKSPREAD” சேனல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது – TNPSC Group 4 Exam 2024 – tamilnadu government exam news

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *