டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட்: TNPSC தேர்வாணையமானது தமிழக அரசு துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்களை செலக்ட் செய்து வருகிறது. அந்த வகையில் எப்படியாவது அரசாங்க வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் பலரும் ராப்பகலா படித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியானது. மேலும் இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் வெறும் 15.8 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட்
மேலும் தேர்வு எழுதியவர்கள் முடிவுகளுக்காக வெகு நாட்களாக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக புகார் எழுப்பி வந்தனர். எனவே அவர்களின் எனவே தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி 3 மாத காலத்திற்குள் அதாவது அக்டோபர் மாதத்திற்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் – இணையத்தில் குவியும் கருத்துக்கள்!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து தேர்வாணையத்தின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. எனவே அந்த கூட்டத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை தீபாவளிக்கு முன்னதாக நாளை மறுதினம்( இரண்டு நாட்களுக்குள்) வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு