தமிழ்நாடு அரசு சார்பில் TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8932 ஆக அதிகரிப்பு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2208 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. TNPSC Group 4 exam Vacancies Increase to 8932 Notification
TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8932 ஆக அதிகரிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
TNPSC குரூப் 4 தேர்வு :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உட்பட 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான கடந்த ஜனவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 30 ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 26 ம் தேதி வரை இந்த பணிகளுக்கான விண்ணப்பபதிவு நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் 9 ம் தேதி நடைபெற்ற தேர்வை சுமார் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினார். மேலும் இந்த தேர்வுக்கான இறுதி முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் கடந்த செப்டெம்பர் மாதம் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில் குரூப் 4 தேர்வில் நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்கள் இருப்பதால் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !
கூடுதல் காலிப்பணியிடங்கள் :
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2208 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8932 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய செய்திகள் :
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம்
பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்? முழு லிஸ்ட் இதோ!
சென்னை ரூட்டு தல விவகாரம் ! மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !