TNPSC தேர்வு கட்டணம் UPI மூலம் செலுத்தலாம்! Gpay | Phonepe | Paytm | பயன்படுத்தலாம்!!
தற்போது TNPSC தேர்வு கட்டணம் UPI மூலம் Gpay, Phonepe, Paytm, செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
TNPSC குரூப் 1 :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தற்போது குரூப் 1 மற்றும் குரூப் 1A கலிப்பாணியிடங்களான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வு கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி:
இதனை தொடர்ந்து TNPSC தேர்வு கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வு கட்டணங்களை UPI மூலம் இனி செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தினை எளிய முறையில் பதிவு செய்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.