TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்: TNPSC தேர்வாணையம் தொடர்ந்து அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்திய வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பணியிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது. பொதுவாக TNPSC என்று எடுத்து கொண்டால் ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாக செயல்படுவது தான்.
ஆனால் தலைவர் பணி காலியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி மாதம் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. tnpsc new chairman sk prabhakar
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
இந்நிலையில் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ’’டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் எப்போதும் நேர்மையாக செயல்படும். மேலும் தேர்வுகளில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தாலோ, அதை என்னிடம் சுட்டிக் காட்டினால் உடனே தக்க நடவடிக்கை எடுக்கப்படும். competitive exams
Also Read: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு – அப்பாவுக்கு நேர்ந்த சோக சம்பவம்!!
மேலும் தேர்வுகளின் முடிவுகள் தாமதமாக வெளியிட படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். தேர்வு நடைமுறைகளில் உள்ள காலதாமதத்தை குறைப்பதுதான் எங்களின் First Priority என்று கூறியுள்ளார்.. இவர் 2028 வரை இப்பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு
UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு