தமிழ்நாடு ஊராட்சி துறை ஆட்சேர்ப்பு 2024. தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சி துறை ஆட்சேர்ப்பு 2024
துறையின் பெயர் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
காலிப்பணியிடங்களின் பெயர் :
அலுவலக உதவியாளர்.
இரவுக்காவலர்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
அலுவலக உதவியாளர் – 01.
இரவுக்காவலர் – 01.
கல்வி தகுதி :
அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இரவுக்காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 18 வயது பூர்த்தியான நபராக இருக்க வேண்டும்.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.85000 சம்பளம் !
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
சம்பளம் :
RS.15700 – RS. 50000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
03.01.2024 முதல் 11.01.2024 வரை மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து மேலும் அதில் கொடுக்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நிபந்தனைகள் :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பபடிவத்தினை மாவட்ட இணையதளத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டும் மைய இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரடியாகவோ தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்றவை தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டு பரிசீலிக்கப்படமாட்டாது.
எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் தகுதி நிர்வாகத்துக்கு உண்டு.