TNSET தேர்வு 2024: மாநில தகுதித் தேர்வு ஒத்திவைப்பு… புதிய தேர்வு தேதி என்ன?TNSET தேர்வு 2024: மாநில தகுதித் தேர்வு ஒத்திவைப்பு… புதிய தேர்வு தேதி என்ன?

TNSET தேர்வு 2024: மாநில தகுதித் தேர்வு ஒத்திவைப்பு: நாடு முழுவதும் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு தனித்தனியாகவே நடத்தி வருகிறது. அதன்படி யுஜிசியால் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test)  வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. அதே போல் மாநில அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (SET – TAMILNADU STATE LEVEL ELIGIBILITY TEST) சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ்நாடு அரசு சார்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்த இருக்கிறது. ஜூன் 7 மற்றும் 8 ல் நடக்க இருந்த தேர்வுக்கு ஏப்ரல் 1 – ஏப்ரல் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.  இந்நிலையில் நாளை (ஜூன் 7) தேர்வு நடக்க இருந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை (ஜூன் 7) மற்றும் மறுநாள்(ஜூன் 8) நடக்க இருந்த SET நுழைவுத் தேர்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த தகவலுக்கு  https://msutnset.com/ இணையதளத்திற்கு செல்லவும். Tnpsc exams 2024 – Tnpsc government jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *